பாகிஸ்தானுடன் போராட இளைஞர்களுடன் போவேன்

14

அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும். இக்கூட்டணி, 50 சதவீதத்திற்கும் அதிகமான ஓட்டுகளை பெற்று ஆட்சி அமைக்கும். நான்கு ஆண்டு கால தி.மு.க., ஆட்சியில், மக்கள், அரசு ஊழியர்கள் வருத்தத்தில் உள்ளனர். முதல்வர் குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக உள்ளது.


வரும் 2026 தேர்தல், தி.மு.க.,விற்கு பெரும் சறுக்கலாக அமையும். குரு பெயர்ச்சி, தி.மு.க.,விற்கு இறங்கு முகமாக அமையும்; அ.தி.மு.க.,விற்கு ஏறுமுகமாக இருக்கும். காஷ்மீரில் சுற்றுலா பயணியரை கொலை செய்த பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது, துல்லிய தாக்குதல் நடத்திய பிரதமர் மோடியை உலகமே பாராட்டுகிறது.


பழனிசாமி உத்தரவிட்டால், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.,வைச் சேர்ந்த 1,000 இளைஞர்களை, பாக்., யுத்த களத்தில் துப்பாக்கி ஏந்தி போராட அழைத்து செல்ல தயாராக உள்ளோம்.



- ராஜேந்திர பாலாஜி,

முன்னாள் அமைச்சர்

Advertisement