சிறு சலசலப்பு கூட வரக்கூடாது: அன்புமணி கட்டளை

சென்னை:
பா.ம.க., தலைவர் அன்புமணி தொண்டர்களுக்கு எழுதிய கடிதம்:
வரும் 11ல், மாமல்லபுரத்தில் நடக்கவுள்ள சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டுக்கு, வன்னியர்கள் மட்டுமல்லாது, பின்தங்கிய நிலையில் உள்ள அனைத்து சமுதாய மக்களும் வர உள்ளனர்.
இந்த மாமல்லபுரம் மாநாடு எந்தவித விமர்சனத்திற்கும் உள்ளாகி விடக்கூடாது. எனவே, தொண்டர்கள் அனைவரும் ராணுவத்திற்கு இணையான கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும். சிறு சலசலப்பு கூட ஏற்படக்கூடாது.
மாநாட்டுக்கு வரும் பாதையிலும், மாநாடு முடிந்து திரும்பும் போதும் ஹோட்டல்கள் திறந்திருக்க வாய்ப்பில்லை. எனவே, இரு வேளைக்கான உணவு, குடிநீர் ஆகியவற்றை நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
முகத்தில் மிளகாய் பொடி தூவி 6 பவுன் தங்க செயின் பறிப்பு
-
அடுத்து என்ன? டில்லியில் முப்படை தளபதிகளுடன் பிரதமர் மோடி சந்திப்பு!
-
போர் நிறுத்தம்; பாக்., இந்தியா ஆகிய இரு நாடுகளை பாராட்டிய தலைவர்கள் பட்டியல்!
-
மத்தியஸ்தம் செய்ய தயார்: காஷ்மீர் பிரச்னையில் மூக்கை நுழைக்கும் டிரம்ப்!
-
போர் நிறுத்தத்திற்கு பின் நடந்தது என்ன? இன்று ராணுவம் முக்கிய அறிவிப்பு
-
கோவையில் தாயை பிரிந்த குட்டி யானை: முதுமலை யானைகள் முகாமில் ஒப்படைப்பு
Advertisement
Advertisement