மதுரை ஆதீனத்திற்கு அச்சுறுத்தல் இல்லை: ரகுபதி

புதுக்கோட்டை : தமிழக அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்திய அரசு ஒற்றுமைக்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகளுக்கு ஆதரவு அளிக்கக்கூடியவர். எனவே, பாக்., பயங்கரவாதிகள் முகாம் மீதான இந்தியா தாக்குதல் நடவடிக்கையில், அவரது முடிவு தான் எங்கள் முடிவு.
மத அடையாளங்களை காண்பித்து, மதுரை ஆதீனம் மீது தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் யாருக்கு இருக்கிறது? நடந்த விபத்தை பூதாகரமாக்கி, அதில் அரசியல் ஆதாயம் தேடப் பார்க்கிறார் மதுரை ஆதீனம். ஏற்பட்ட விபத்துக்கு முழு காரணம், அவர் வந்த கார் தவறான சாலையில் அதிவேகமாகச் சென்றது தான்.
அவர் கூறும் குற்றச்சாட்டுகளை பார்த்தால், அவருக்கு பின்னணியில் வேறு எவரும் இருக்கின்றனரோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. அது மட்டுமல்ல, பா.ஜ.,வின் ஆதாயத்துக்காகக்கூட, அவர் நடக்காத ஒரு விஷயத்தை பெரிதுபடுத்தி சொல்கிறாரோ எனத் தோன்றுகிறது. அவருக்கு யாரும் அச்சுறுத்தல் கொடுத்து, இப்படி சொல்லுங்கள் என சொல்லி இருக்கலாம். ஆதீனத்துக்கு மட்டுமல்ல; யாருக்கும் இந்த ஆட்சியில் அச்சுறுத்தல் கிடையாது. இருந்த போதும், ஆதீனம் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடக்கிறது.
நான்காண்டு கால தி.மு.க., ஆட்சியில், மக்களுக்கு வேதனை என்கிறார் பழனிசாமி. அவருக்கு மட்டும் தான் வேதனை; வேறு யாருக்கும் கிடையாது. தமிழக மக்களுக்கு, அரசு உரிய பாதுகாப்பை வழங்கி வருகிறது.
தமிழகத்தில் 58 சதவீத பெண்கள் பணிக்கு செல்கின்றனர். கல்வியில் அவர்கள் பெற்றிருக்கும் தகுதி தான் இதற்கு முக்கிய காரணம். அதே போல, பெண்கள் தமிழகத்தில் சுதந்திரமாக உள்ளனர்.
சர்வசதா காலமும் துாங்கிக்கொண்டு இருக்கிற பழனிசாமிக்கு, இது தெரியாது; அவரை தட்டி எழுப்பி வேண்டுமானால் சொல்லலாம்.
இவ்வாறு ரகுபதி கூறினார்.

மேலும்
-
பத்மஸ்ரீ விருது பெற்ற விஞ்ஞானி காவிரி ஆற்றில் சடலமாக கண்டெடுப்பு!
-
சென்னையில் பங்களா வீட்டில் தீ; வயதான தம்பதி பலி
-
மே 14,15ம் தேதி 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு; வானிலை மையம் கணிப்பு
-
பார்லி சிறப்பு கூட்டம் நடத்த வேண்டும்: பிரதமர் மோடிக்கு ராகுல், கார்கே கடிதம்
-
பிரம்மோஸ் ஏவுகணை இந்தியாவின் பெருமை: ராஜ்நாத் சிங் பெருமிதம்!
-
இலங்கையில் பள்ளத்தாக்கில் பஸ் கவிழ்ந்து விபத்து; 21 பேர் பரிதாப பலி