இந்திய படைகளுக்கு காங்., முழு ஆதரவு: ராகுல் பேட்டி

42


புதுடில்லி: '' இந்திய படைகளுக்கு காங்கிரஸ் கட்சி முழு ஆதரவு அளிக்கும்,'' என லோக்சபா எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் கூறியுள்ளார்.





டில்லியில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவின் தாக்குதல் குறித்து காங்கிரசின் செயற்குழு கூட்டத்தில் விவாதித்தோம். நமது படைகளுக்கு முழு அதரவு அளிக்கிறோம். அவர்களுக்கு எங்களது வாழ்த்துகள். அவர்களுக்கு எங்களது அன்பை தெரிவிக்கிறோம். காங்கிரஸ் மற்றும் கட்சியின் செயற்குழு முழு ஆதரவு அளிக்கிறது. அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்கும்படி மத்திய அரசிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது; நமது நாட்டில் நடந்த சம்பவம் மற்றும் அதற்கு அரசு அளித்த பதிலடி குறித்து விவாதிப்பதற்காக காங்கிரசின் செயற்குழு கூட்டம் நடந்தது. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மூலம், பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாத முகாம்கள் மீது துணிச்சலாக தாக்குதல் நடத்தி உறுதியான பதிலடி வழங்கி யநமது ஆயுதப் படைகளை கண்டு நாம் மிகவும் பெருமைப்படுகிறோம்.
நமது வீரர்களின் தைரியம் மற்றும் நாட்டுப்பற்றுக்கு எங்களது வணக்கத்தை தெரிவிக்கிறோம். இவ்வாறு கார்கே கூறினார்.

Advertisement