அறிவியல் துளிகள்

1. நமது சூரியக் குடும்பத்திலிருந்து 300 ஒளியாண்டுகள் தொலைவில் பிரமாண்டமான மேகக் கூட்டத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இது நமது சூரியனைப் போல் 5,500 மடங்கு பெரியது, ஹைட்ரஜன் மூலக்கூறுகளால் ஆனது.
2. சுற்றுச்சூழல் மாசுபாட்டால் கடலில் அமிலத்தன்மை அதிகரித்து வருகிறது. இதனால் பவளப் பாறைகள் வேகமாக அழிகின்றன. இதனால் பவளப் பாறைகளை நம்பி வாழும் 25 சதவீத கடல் வாழ் உயிரினங்கள் ஆபத்தில் இருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
3. செவ்வாய் கோள் ஒரு காலத்தில் பூமியைப் போல் தண்ணீர், பனி நிறைந்த ஒரு கோளாக இருந்துள்ளது என அமெரிக்காவைச் சேர்ந்த கலிபோர்னியா பல்கலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அதற்கான தடயங்கள் செவ்வாயின் புவியியல் அமைப்பில் இருப்பதாகக் கூறுகிறார்கள்.
4. WD 1856 +534b என்பது பூமியிலிருந்து 80 ஒளியாண்டுகள் தொலைவில் உள்ள கோள். வியாழன் கோள் அளவில் இருக்கும் இது ஓர் இறந்து போன வெள்ளைக் குள்ள நட்சத்திரத்தைச் சுற்றி வருவதை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
5. அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் முற்றிலும் புதுவகையான தாவரம் ஒன்றை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் பச்சை நிற இலைகள் மீது கம்பளி போன்ற முடிகள் மூடியுள்ளன. எனவே இதற்கு உல்லி டெவில் (Wooly devil) என்று பெயரிட்டுள்ளனர்.
மேலும்
-
தொடங்கியது சித்திரை முழு நிலவு மாநாடு!
-
இந்தியா தாக்குதலில் முக்கிய பயங்கரவாதிகள் பலி: உறுதி செய்தது ராணுவம்
-
பாகிஸ்தானும் பயங்கரவாதமும்... ஆதாரத்துடன் ஐ.நா.,வை நாடும் இந்தியா!
-
நேபாளத்திற்கு 15 மின்சார வாகனம்; பரிசளித்தது இந்தியா
-
டில்லியில் இன்றும் 100 விமானங்கள் ரத்து
-
இந்தியா, பாகிஸ்தான் போர் நிறுத்தம் மகிழ்ச்சி அளிக்கிறது: புதிய போப் முதல் உரை!