பும்ரா, ஜடேஜா 'நம்பர்-1': ஐ.சி.சி., டெஸ்ட் தரவரிசையில்

துபாய்: டெஸ்ட் வீரர்களுக்கான ஐ.சி.சி., தரவரிசையில் இந்தியாவின் பும்ரா (பவுலிங்), ஜடேஜா (ஆல்-ரவுண்டர்) முதலிடத்தில் நீடிக்கின்றனர்.
டெஸ்ட் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் நேற்று வெளியிட்டது. 'ஆல்-ரவுண்டர்' தரவரிசையில் இந்தியாவின் ரவிந்திர ஜடேஜா, 400 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டார். ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 'ஆல்-ரவுண்டராக' அசத்திய (15 விக்கெட், 116 ரன்) வங்கதேசத்தின் மெஹிதி ஹசன் மிராஸ் (327 புள்ளி) 2வது இடத்துக்கு முன்னேறினார். தென் ஆப்ரிக்காவின் யான்சென் (294) 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார். மற்றொரு இந்திய வீரர் அக்சர் படேல் (220) 12வது இடத்தில் தொடர்கிறார்.
பவுலர்களுக்கான தரவரிசையில் இந்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (908) 'நம்பர்-1' இடத்தில் நீடிக்கிறார். ஜடேஜா (745) 10வது இடத்தில் தொடர்கிறார். பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (847), ரிஷாப் பன்ட் (739) முறையே 4, 10வது இடத்தில் உள்ளனர்.
மேலும்
-
தமிழக அமைச்சரவை இலாகா மாற்றம்; ரகுபதியிடம் இருந்து சட்டத்துறை பறிப்பு
-
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு; தமிழக அரசு மீது இ.பி.எஸ்., பாய்ச்சல்
-
பஞ்சாபில் பாகிஸ்தானின் ஏவுகணையை சுக்குநூறாக்கியது இந்தியா!
-
இந்தியாவுக்கு அனைத்து உரிமையும் உண்டு; ஆபரேஷன் சிந்தூருக்கு பிரிட்டன் எம்.பி., ஆதரவு
-
பிரதமர் மோடி உடன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு!
-
டில்லியில் கூடியது அனைத்துக் கட்சி கூட்டம்; ஆபரேஷன் சிந்தூர் குறித்து முக்கிய ஆலோசனை