தொழிற்கல்வியை மேம்படுத்த ரூ.60,000 கோடியில் திட்டம்

புதுடில்லி:இந்தியாவின் தொழிற்கல்வியில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்காக, 60,000 கோடி ரூபாய் செலவில், தொழிற்பயிற்சி நிலையங்களை மேம்படுத்துவதற்கான தேசிய திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி உள்ளது.

குறிப்பிடத்தக்க அம்சங்கள்:

 புதிய திட்டத்தின் கீழ் 1,000 அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்கள், ஒரே மையத்தின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டு, தொழிற்சாலைக்கு ஏற்ற வகையில், பயிற்சிகளை மறுசீரமைப்பதில் கவனம் செலுத்தப்படும்.

 ஐந்து ஆண்டுகளில் 20 லட்சம் இளைஞர்களை திறன் மிக்கவர்களாக மாற்றுவது

 சென்னை, புவனேஸ்வர், ஹைதராபாத், கான்பூர், லுாதியானாவில் அடிப்படை கட்டமைப்பு மேம்பாடு

 50,000 பயிற்றுநர்களுக்கு திட்டத்தின்கீழ் பயிற்சி அளிக்கப்பட உள்ளது

 எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமொபைல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறைகளில் கூடுதல் கவனம்.

பங்களிப்பு

மத்திய அரசு ரூ.30,000 கோடி

மாநிலங்கள் ரூ.20,000 கோடி

தொழில் நிறுவனங்கள் ரூ.10,000 கோடி

Advertisement