சுட்டு வீழ்த்தப்பட்ட பாக்., விமானம்; பாகிஸ்தான் விமானி கைது

2

ஜெய்சல்மர்: இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்திய, பாகிஸ்தான் ‛எப் 16' ரக போர் விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. அந்த விமானத்தின் விமானி கைது செய்யப்பட்டார்.


பாகிஸ்தான் தொடர் அத்துமீறலை அடுத்து பாகிஸ்தான் மீதான தாக்குதலை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. இந்தியாவின் ஜம்மு, பதான்கோட், உதம்பூரில் சர்வதேச எல்லைகளை குறிவைத்து, பாக்., நடத்தி வருகிறது. அதற்கு பதிலடி தரும் வகையில், பாக்., தலைநகர் இஸ்லாமாபாத்தை குறிவைத்து, இந்தியா பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், அந்நகரம் இருளில் மூழ்கி உள்ளது. மேலும், லாகூர் நகரம் மீதும், இந்தியா தாக்குதல் நடத்தி வருகிறது.


இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் பகுதிக்குள் ஊடுருவிய, பாகிஸ்தான் ‛எப் 16' ரக விமானத்தை இந்தியா சுட்டு வீழ்த்தியது. இதில் இருந்து உயிர் தப்பிய, பாகிஸ்தானைச் சேர்ந்த அந்த போர்விமானத்தின் விமானி, இந்திய ராணுவத்தால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார்.

Advertisement