இந்தியா-உஸ்பெகிஸ்தான் மோதல் * பெண்களுக்கான நட்பு கால்பந்தில்...

புதுடில்லி: இந்திய பெண்கள் கால்பந்து அணி, உஸ்பெகிஸ்தானுக்கு எதிராக இரண்டு நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளது.
பெண்களுக்கான ஆசிய கோப்பை கால்பந்து தொடர் 2026ல் நடக்க உள்ளது. இதில் இந்திய அணி பி பிரிவில், மங்கோலியா, டிமோர்-லெஸ்தே, ஈராக், தாய்லாந்து அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.
தனது முதல் போட்டியில் ஜூன் 23ல் மங்கோலியாவை சந்திக்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் 'பிபா' தரவரிசையில் 69 வது இடத்தில் உள்ள இந்திய பெண்கள் அணி, 50வது இடத்திலுள்ள உஸ்பெகிஸ்தான் அணிக்கு எதிராக இரண்டு நட்பு போட்டியில் பங்கேற்க உள்ளது.
இதற்கான இந்திய அணியில் பூர்ணிமா குமாரி, நிர்மலா தேவி, சந்தியா, மார்டினா, சஞ்சு, மாலதி, ரஞ்சனா சானு, ஸ்வீட்டி தேவி, ஷில்கி தேவி, கார்த்திகா அங்கமுத்து, பிரியதர்ஷினி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர்.
இப்போட்டிகள் பெங்களூருவில் உள்ள படுகோன்-டிராவிட் விளையாட்டு மையத்தில் வரும் மே 30, ஜூன் 3ல் நடக்க உள்ளது. இவ்விரு அணிகள் இதுவரை 13 போட்டியில் மோதின. இந்திய அணி 1 போட்டியில் மட்டும் வென்றது. 9ல் தோற்றது. 3 போட்டி 'டிரா' ஆகின.

Advertisement