பெண்ணிடம் செயின் பறிக்க முயன்றவர் கைது
குன்றத்துார், குன்றத்துார், சம்பந்தம் நகரில் சார் - பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன் அருகே உள்ள தனியார் ஜெராக்ஸ் கடையில் ஊழியராக பணியாற்றுபவர் மீனாட்சி, 40.
இவர், நேற்று மதியம், கடையில் மதிய உணவு சாப்பிட்டு கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மர்ம நபர் ஒருவர், மீனாட்சியின் கண்ணில் மிளாகாய் பொடியை துாவி, அவரின் தங்க செயினை பறிக்க முயன்றார்.
மீனாட்சி கூச்சலிட்டதை கேட்டு, அப்பகுதியில் இருந்தோர் அந்த மர்ம நபரை மடக்கி பிடித்து, குன்றத்துார் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீசார் விசாரணையில், பிடிபட்ட நபர், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சத்யா, 45, என்பது தெரிய வந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த போலீசார், சிறையில் அடைத்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement