வைகை அணையில் நீர் திறப்பு

ஆண்டிபட்டி:மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து இன்று மாலை தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத் துறையினர் தெரிவித்தனர்.

மதுரையில் நடைபெறும் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடக்க உள்ளது.

இதனை முன்னிட்டு வைகை அணை நீர், முன்கூட்டியே மதுரை சென்று சேரும் விதமாக இன்று மாலை 6:00 மணிக்கு திறந்து விடப்பட உள்ளது.

வைகை அணை நீர் வளத்துறையினர் கூறுகையில், 'மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து 216 மில்லியன் கன அடி நீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இன்று மாலை 6:00 மணிக்கு வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீர் ஆற்றின் வழியாக திறக்கப்பட்டு, வரும் மே 12ல் நிறுத்தப்படும். இதனால், கரையோர மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்றனர்.

Advertisement