பெண்ணுக்கு கொலை மிரட்டல் 4 பேர் மீது போலீசார் வழக்கு

புதுச்சேரி: பெண்ணை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த நான்கு பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

புதுச்சேரி நைனார்மண்ட பம் சுதானா நகர் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி 52, இவரது கணவர் சங்கர் 1988ம் ஆண்டு அப்பகுதியில் 2 மனைகளை வாங்கி வீடு கட்டியுள்ளார்.

இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த 2 பேர் அவர்களிடம் இடம் சம்பந்தமாக பிரச்னை செய்ததால் நீதிமன்றத்தில் இவ்வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் முருங்கப்பாக்கத்தைச் சேர்ந்த விமல்ராஜ், விஜய், தமிழ், முத்துவேல் ஆகியோர் அத்துமீறி இவரது வீட்டுக்கு வந்து வழி தர முடியாது என்று கூறுகிறீர்களா என்று கேட்டு வீட்டின் வெளியே இருந்த இரும்பு வேலி மற்றும் மால்கள் ஆகியவற்றை பொக்லைன் மூலம் சேதப்படுத்தி அகற்றியனர்.

இதனை தடுக்க சென்ற விஜயலட்சுமியை தாக்கி பொக்லைன் மூலம் ஏற்றி கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இதுகுறித்து அவர் முதலியார்பேட்டை போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விமல்ராஜ் உள்ளிட்ட 4பேர்மீது வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.

Advertisement