கிருஷ்ணசாமி பள்ளி பிளஸ் 2 தேர்வில் சாதனை

கடலுார்: கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய 389 மாணவர்களில் 380 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தனர்.

கடலுார் கிருஷ்ணசாமி நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் கனிஷ் 600க்கு 585 மதிப்பெண் பெற்று முதலிடம், அபிஷேக் இளஞ்சேரன் 584 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், ஹரிஹரன் 583 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பிடித்தனர்.

சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பள்ளித் தாளாளர் ராஜேந்திரன், பரிசு வழங்கி பாராட்டினார். முதலிடம் பிடித்த மாணவர் கனிஷூக்கு 5,000 ரூபாய், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பிடித்த மாணவர்களுக்கு 3,000, 2,000 ரூபாய் ரூபாய் ரொக்கம் வழங்கப்பட்டது. பள்ளியில் தேர்வு எழுதிய 389 பேரில் 380 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.

பிரெஞ்சு மற்றும் கணினி அறிவியலில் தலா 3 பேர், கணிதம், வணிகவியல், உயிரியல், கணினி தொழில்நுட்பம் பாடத்தில் தலா ஒருவர் என மொத்தம் 11 பேர் 100க்கு 100 மதிப்பெண் பெற்று சாதனை படைத்தனர்.

பள்ளி முதல்வர் நடராஜன், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் உடனிருந்தனர்.

Advertisement