மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.37,000 கோடி கடன்

சென்னை:'நடப்பாண்டு மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு, 37,000 கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது' என, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதன் அறிக்கை:

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில், சுய உதவி குழுக்களுக்கு, வங்கி கடன் பெற்று தரப்படுகிறது. கடந்த நான்கு ஆண்டுகளில், 18.30 லட்சம் சுய உதவிக்குழுக்களை சேர்ந்த, 2.38 கோடி மகளிருக்கு, 1.13 லட்சம் கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டு சுய உதவிக் குழு மகளிருக்கு, 37,000 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்படும் என, சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். நேற்று வரை, 7,917 சுய உதவி குழுக்களுக்கு, 699 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement