மின்வாரிய ஸ்டிரைக் ஆயத்த கருத்தரங்கு

கோவை; தமிழ்நாடு மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு, அகில இந்திய வேலைநிறுத்த ஆயத்த பணிகளுக்கான முன்னேற்பாடு கருத்தரங்கு, கோவை மலையாள சமாஜ் அரங்கில் நடந்தது. சி.ஐ.டி.யு., மாநில தலைவர் ஜெய்சங்கர் துவக்கிவைத்தார்.
அகில இந்திய அளவில், மே 20ல் மின்வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு சார்பில், வேலை நிறுத்தம் நடைபெற உள்ளது.
மின்துறை உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை தடுத்தல், காலி பணியிடங்களை நிரப்புதல், ஸ்மார்ட் மீட்டர் திட்டம் கைவிடுதல், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்தல், பொதுத்துறை அரசு துறைகளில் ஒப்பந்த முறையை கைவிடுதல், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சி.ஐ.டி.யு., மண்டல செயலாளர் கோபாலகிருஷ்ணன், தொழிலாளர் சம்மேளனம் மாநில இணை செயலாளர் கந்தவேல் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகிகள் பங்கேற்றனர்.
மேலும்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி