ஈரோட்டில் மாவட்ட அளவிலானவிளையாட்டு தேர்வு போட்டி
ஈரோடு:ஈரோட்டில், அரசு விளையாட்டு விடுதியில் சேர்க்கைக்கான மாவட்ட அளவிலான தேர்வு போட்டி நேற்று நடந்தது. இதில், 110 மாணவர்கள் பங்கேற்றனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும், விளையாட்டு விடுதிகளில் தங்கி, பயிற்சி பெறுவதற்கான சேர்க்கை நடைபெற உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் ஏழு முதல் ஒன்பதாம் வகுப்பு, பிளஸ் 1 படிக்கும் மாணவ, -மாணவியர் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. விண்ணப்பித்த மாணவர்களுக்கு, நேற்று ஈரோடு வ.உ.சி., விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தேர்வு போட்டி நடந்தது.
மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு தனித்தனியாக தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல் பந்து, கபடி, கையுந்து பந்து, கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இருந்து, 110 மாணவர்கள் பங்கேற்று திறமைகளை வெளிக்காட்டினர். இன்று (8) மாணவியருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது.மாவட்ட விளையாட்டு அலுவலர் சதீஷ்குமார் கூறுகையில், ''விளையாட்டு விடுதி சேர்க்கைக்கு மாவட்ட அளவிலான நடக்கும் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்தவர்கள், மாநில அளவில் வரும் 19 முதல் 24 வரை நடக்கும் போட்டிகளில் பங்கேற்க தகுதி பெறுவர். மாநில அளவிலான போட்டிகளில் தேர்வு பெறுபவர்கள், கவுன்சிலிங் மூலம் விளையாட்டு விடுதிகளில் சேர்க்கை உறுதி செய்யப்படும்,'' என்றார்.
மேலும்
-
" இறையாண்மையை காப்போம்"- இந்திய ராணுவம் உறுதி : பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல் முறியடிப்பு
-
தோல்வியில் முடிந்தது பாக்., தாக்குதல்; ஜம்மு செல்கிறார் உமர் அப்துல்லா
-
குளத்தை மீட்ட இளைஞருக்கு கிராம மக்கள், எம்.பி., பாராட்டு
-
போதை மருந்து புழக்கம் கண்காணிக்க 41 பறக்கும் படை அமைக்க கருத்துரு
-
450 உலக பல்கலைகளுடன் ஐ.ஐ.எம்., காஷிபூர் கைகோர்ப்பு
-
கண்ணகி கோவில் விழா பக்தர்களுக்கு வசதி செய்யப்பட்டுள்ளதா? உயர் நீதிமன்றம் கேள்வி