ரயிலில் மொபைல் திருடியவர் கைது
ஈரோடு,திருப்பத்தூர் மாவட்டம், நத்தம் காலனியை சேர்ந்தவர் பிரசாந்த், 28. திருப்பூர் பனியன் கம்பெனி தையல் தொழிலாளி. சொந்த ஊர் சென்று விட்டு திருப்பூருக்கு செல்ல கடந்த மார்ச், 3ல் பெங்களூரு--கோவை உதய் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்தார். ஈரோட்டை கடந்து திருப்பூர் நோக்கி சென்றபோது, பிரசாந்த் தனது சட்டைப்பையில் வைத்திருந்த, 20 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள மொபைல் போன் காணாமல் போனது தெரியவந்தது.
இந்தநிலையில், காசிபாளையம் ரயில்வே தண்டவாள பகுதியில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டபோது, சந்தேகப்படும்படி நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் ஈரோடு அருகே சோளங்காபாளையத்தை சேர்ந்த தர்மன், 24, ஈரோட்டை சேர்ந்த, 15 வயது சிறுவன் என்பதும், இவர்கள் ரயில் பயணிகளிடம் மொபைல் போன்களை திருடியதும் தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், திருடப்பட்ட மொபைல் போனை மீட்டனர்.
மேலும்
-
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
-
இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!
-
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
-
போர் தொடர்பான உண்மை தகவல்: பொது மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள்
-
இந்தியா தாக்கிய பாக்., விமானப்படை தளங்கள் பட்டியல்!
-
பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும்: இந்தியா முடிவு