போர் தொடர்பான உண்மை தகவல்: பொது மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள்

புதுடில்லி: போர் தொடர்பான சரியான தகவல்களை அறிந்து கொள்ள மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் whatsapp சேனலை பின் தொடர பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா நடத்திய அதிரடி தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தான் நிலைகுலைந்து காணப்படுகிறது. அந்நாடு பதற்றத்தை அதிகரிக்கும் வகையில் செயல்படுகிறது. இந்தியாவின் தாக்குதலில் அந்நாட்டிற்கு பலத்த சேதம் ஏற்பட்டு உள்ளது. ஆனால், அது குறித்து எதுவும் தெரிவிக்காத பாகிஸ்தான், இந்தியா தாக்குதல், சேதம், வீரர்கள் குறித்து பொய்யான தகவலை பரப்பி வருகிறது.
இதனை உடனடியாக ' FactCheck' செய்யும் மத்திய அரசு, பாகிஸ்தான் பரப்பும் பொய்யை அம்பலப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்த முக்கியமான நேரத்தில், வாட்ஸ்அப் செயலியில் ஏராளமான பொய் தகவல்கள் பரவி வருகின்றன. எச்சரிக்கையுடன் இருப்பதுடன், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் போர் தொடர்பான உண்மையான தகவலை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்அப் சேனலை(https://whatsapp.com/channel/0029VaEHkn3JkK7BfWTsm23W) பின்பற்றுங்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


மேலும்
-
பிரதமர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை!
-
இந்தியா - பாக்., போர் நிறுத்தம்: தலைவர்கள் வரவேற்பு
-
முடிவுக்கு வந்தது போர்; காஷ்மீரில் இனிப்பு வழங்கி மக்கள் கொண்டாட்டம்!
-
கேரளாவில் தென்மேற்கு பருவமழை முன்னரே தொடங்கும்; வானிலை மையம் அறிவிப்பு
-
சிந்து நதிநீர் ஒப்பந்தம் முறிந்தது முறிந்தது தான்: மத்திய அரசு
-
போர் நிறுத்தம் ஏற்பட்டாலும் பயங்கரவாதத்திற்கு எதிரான கொள்கையில் மாற்றமில்லை: ஜெய்சங்கர்