நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு

புதுடில்லி: நாம் தமிழர் கட்சிக்கு ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை புதிய சின்னமாக ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்த நாம் தமிழர் கட்சி கடந்த லோக்சபா தேர்தலில் 8.22 சதவீதம் ஓட்டுகளை பெற்றது. இதையடுத்து நாம் தமிழர் கட்சியை மாநில கட்சியாக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. 2016ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் நாம் தமிழர் போட்டியிட்டது.
அப்போது கட்சிக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னம் கேட்டு தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் அந்த சின்னம் வழங்கப்படாமல், அதற்கு பதிலாக தான் கரும்பு விவசாயி என்ற சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
பின்னர் அங்கீகாரம் பெற்றாலும் நாம் தமிழர் கட்சிக்கு கேட்ட கரும்பு விவசாயி அல்லது புலி சின்னம் கிடைக்காமல் இருந்தது. சின்னம் கேட்டு தாமதமாக விண்ணப்பித்ததால் அந்த சின்னங்கள் வேறு கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. எனவே, அதை தர முடியாது என்று தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது.
இந்நிலையில் நாம் தமிழருக்கு ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கி உள்ளது. அதற்கான கடித்தையும் தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை நாம் தமிழர் கட்சி தமது அதிகாரப்பூர்வ தகவல் தொழில் நுட்ப பிரிவு வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
சின்னம் தொடர்பான விவகாரத்தில் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்காத தருணத்தில் நடைபெற்ற தேர்தல்களில் நாம் தமிழர், ஒலி வாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிட்டது. தற்போது ஏற்கனவே இருந்த கரும்பு விவசாயி சின்னத்துக்கு பதில் ஏர் கலப்பையுடன் கூடிய விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.








மேலும்
-
மத்திய உள்த்துறை செயலர் கோவிந்த் மோகன் மாநில தலைமைச் செயலர்களுடன் ஆலோசனை
-
அத்துமீறும் பாக்.,கிற்கு பதிலடி கொடுக்க ராணுவத்திற்கு முழு சுதந்திரம்: மத்திய வெளியுறவு செயலர் விக்ரம் மிஸ்ரி
-
பிரிமியர் தொடர் மீண்டும் நடக்குமா: பி.சி.சி.ஐ., புது திட்டம்
-
டெஸ்டில் ஓய்வு...கோலி விருப்பம்
-
முதல் தங்கம் வென்றார் மதுரா * உலக கோப்பை வில்வித்தையில் கலக்கல்
-
செஸ்: பிரக்ஞானந்தா வெற்றி