தி.மு.க., ஆட்சி சாதனை விளக்க கூட்டம் அமைச்சர் கணேசன் அழைப்பு

சிறுபாக்கம்: கடலூர் தி.மு.க., மேற்கு மாவட்டத்தில் நடக்கும் சாதனை விளக்க கூட்டங்களில் பங்கேற்க மாவட்ட செயலாளர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை: ,

முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஆகியோர் உத்தரவின்படி, கடலூர் தி.மு.க., மேற்கு மாவட்ட பகுதிகளில் தி.மு.க., ஆட்சியின் 4 ஆண்டுகள் சாதனைகளை நாடு போற்றும் நான்காண்டு- தொடரட்டும் பல்லாண்டு' தலைப்பில் விளக்க கூட்டங்கள் நடக்கிறது. அதன்படி, இன்று (8ம் தேதி) திட்டக்குடி தொகுதி, தொழுதூர் பஸ் நிலையம், நெய்வேலி தொகுதியில் காடாம்புளியூரில், விருத்தாசலம் அடுத்த கொல்லிருப்பில், திட்டக்குடி தொகுதி, மங்களூரில், நெய்வேலி தொகுதி, ஆர்ச்கேட் எதிரில் நடக்கிறது.

நாளை (9ம் தேதி) நெல்லிக்குப்பம் நகரத்தில், விருத்தாசலம் தொகுதி, இருளக்குறிச்சியில், திட்டக்குடி தொகுதி, முருகன்குடியில், நெய்வேலி தொகுதி, நெய்வேலி நகரத்தில் நடக்கிறது. 10ம் தேதியில், விருத்தாசலம் தொகுதி, நல்லூர், விருத்தாசலத்திலும், பண்ருட்டி பஸ் நிலையத்திலும், திட்டக்குடி தொகுதி, மா.புடையூரில் நடக்கிறது. 11ம் தேதியில், பண்ருட்டி தொகுதி வீரப்பாரில், விருத்தாசலம் தொகுதி, காட்டுப்பரூரில் , திட்டக்குடி தொகுதி, திட்டக்குடி நகரத்திலும் நடக்கிறது. 12ம் தேதியில், பண்ருட்டி தொகுதியில், பாலூர் கடைவீதியிலும், விருத்தாசலம் தொகுதி, சாத்துக்கூடலிலும் நடக்கிறது.

கூட்டத்தில் தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் எம்.பி.,க்கள், தி.மு.க., நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, கிளை, வார்டு செயலர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு, அதில் கூறியுள்ளார்.

Advertisement