வீட்டிலேயே குழந்தை பெற்ற கல்லுாரி மாணவி
கோபி,
கோபியில், வீட்டிலேயே கல்லுாரி மாணவிக்கு குழந்தை பிறந்தது குறித்து, சுகாதாரத்
துறையினர் விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம், கோபி அருகே சீதாம்மாள் காலனியில், திருப்பூரை சேர்ந்த சுப்ரீத், 20, என்பவர், 19 வயது பெண்ணை அவரது மனைவி என கூறி வாடகை வீட்டில் குடியிருந்துள்ளார். அந்த இளம்பெண், கோவையில் உள்ள தனியார் கல்லுாரியில் படித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் இளம் பெண்ணுக்கு, வீட்டிலேயே பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் ஏற்பட்ட ரத்தப்போக்கால், கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தகவலறிந்த கோபி நகர ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ குழுவினர், தனியார் மருத்துவமனை சென்று, பெண்ணிடம் விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது, வீட்டிலேயே பெண்ணுக்கு குழந்தை பிறந்திருப்பதும், பெண்ணின் பெற்றோர் கோபியில் வசிப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சுப்ரீத் மற்றும் பெண்ணிடம் சுகாதாரத்துறையினர் விசாரணை செய்தனர்.
மேலும் பெண்ணின் பெற்றோரிடம், சுகாதாரத்துறையினர் விசாரணை செய்ததில், அவர்களின் மகள் கோவையில் உள்ள கல்லுாரியில் படித்து வருவதாக கூறியுள்ளனர். அதன்பின் அவர்களின் மகளுக்கு குழந்தை பிறந்து, கோபியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து குழந்தையுடன் தனியார் மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டிருந்த மகளை பார்த்து, பெற்றோர் அதிர்ச்சியடைந்தனர்.
மேலும்
-
நாம் தமிழர் கட்சிக்கு விவசாயி சின்னம்: தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பு
-
இன்று மாலை 5 மணி முதல் போர் நிறுத்தம்; மே 12ல் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை!
-
இந்தியா- பாகிஸ்தான் போர் நிறுத்தம்: டிரம்ப் அறிவிப்பு
-
போர் தொடர்பான உண்மை தகவல்: பொது மக்களுக்கு பாதுகாப்பு அமைச்சகம் வேண்டுகோள்
-
இந்தியா தாக்கிய பாக்., விமானப்படை தளங்கள் பட்டியல்!
-
பயங்கரவாத தாக்குதல் நடந்தால் போராக கருதப்படும்: இந்தியா முடிவு