ஊத்துக்கோட்டையில் மின்னலுடன் மழை வீட்டின் கட்டட கூரை இடி தாக்கி சேதம்

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், வெங்கல், அம்மணம்பாக்கம், தாமரைப்பாக்கம் மற்றும் சுற்றியுள்ள இடங்களில், நேற்று முன்தினம், இரவு 8:00 மணிக்கு, குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது. இதை தொடர்ந்து பலத்த இடி, மின்னலுடன் மழை பெய்தது.

அம்மணம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த மின்வாரிய ஊழியர் புருஷோத்தமன் என்பவரின் வீட்டின் கட்டட கூரையில் இடி தாக்கி சேதம் அடைந்தது. மேலும், வீட்டில் இருந்த ஏசி, டிவி, மின்விசிறி உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சேதம் அடைந்தன. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

Advertisement