தேசிய பாதுகாப்பு நிதிக்கு இசை நிகழ்ச்சி கட்டணம்: இளையராஜா
சென்னை:இசை நிகழ்ச்சி கட்டணம் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,க்கான ஒரு மாத சம்பளத்தை, தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்குவதாக, இசையமைப்பாளர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை:
இந்த ஆண்டு துவக்கத்தில், என் முதல் சிம்பொனி இசையமைத்து பதிவு செய்து, அதற்கு, 'வேலியன்ட்' என்று பெயரிட்டேன்.
இந்த மே மாதத்தில், நமது உண்மையான கதாநாயகர்களான இந்திய ராணுவ வீரர்கள், பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணியரை கொடூரமாகக் கொன்ற எதிரிகளை, நம் எல்லைகளில் நின்று, துணிச்சல், உறுதியுடன் எதிர்கொண்டு வருகின்றனர்.
தன்னலமற்ற நமது ராணுவ வீரர்கள், எதிரிகளை மண்டியிட செய்வர் என்று நம்புகிறேன்.
'ஜெய பேரிகை கொட்டடா, கொட்டடா, ஜெய பேரிகை கொட்டடா' என்றார் பாரதி.
பெருமைமிக்க இந்தியனாக, ராஜ்யசபா எம்.பி.,யாக, பயங்கரவாதத்தை ஒழிக்கவும், எல்லையில் மக்களை பாதுகாக்கவும் போராடி வரும் கதாநாயகர்களான ராணுவ வீரர்களின் வீரமிக்க, துணிச்சலான முயற்சிகளை பாராட்டுகிறேன்.
இதற்காக ஒரு சிறு பங்களிப்பாக, என் இசை நிகழ்ச்சி கட்டணம் மற்றும் ஒரு மாத சம்பளத்தை, தேசிய பாதுகாப்பு நிதிக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும்
-
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா கட்சிக்கு தடை; பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை!
-
வேன் கவிழ்ந்து 16 பேர் காயம்
-
இன்றைய நிகழ்ச்சி ராமநாதபுரம்
-
1008 திருவிளக்கு பூஜை
-
ராமேஸ்வரத்தில் சுகாதார பணியாளர்கள் இல்லை நோய் பரவும் அபாயம்
-
வறட்சியால் பெரிய கண்மாய் நீர் வேகமாக குறைவதால் கோடை விவசாயிகள் கவலை