கிணற்றில் மூழ்கி சிறுவன் பலி

மூங்கில்துறைப்பட்டு: மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் மூழ்கி சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார்.

மூங்கில்துறைப்பட்டு அடுத்த பொருவளூர் வள்ளி நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கிஷோர்,15; இவர் மூங்கில்துறைப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், 10,ம் வகுப்பு முடித்து, பொதுத்தேர்வு முடிவிற்காக காத்திருந்தார்.

இந்த நிலையில், நேற்று நண்பர்களுடன் அருகில் உள்ள, விவசாய கிணற்றில் குளிக்க சென்றார். இவருக்கு நீச்சல் தெரியாததால், அடுத்த சில நிமிடங்களில் நீரில் மூழ்கினார். அதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, மேல்சிறுவளூர் கூட்டு சாலையில், உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து மூங்கில்துறைப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement