ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளும் வாகனம்

சங்கராபுரம்: சங்கராபுரம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு குப்பை அள்ளும் பேட்டரி வாகனம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய குழு தலைவர் திலகவதி நாகராஜன் தலைமை தாங்கினார். பி.டி.ஓ.,க்கள் ஐயப்பன், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். அலுவலக மேலாளர் ஆறுமுகம் வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளராக உதயசூரியன் எம்.எல்.ஏ., கலந்து கொண்டு ஊராட்சிகளுக்கு பேட்டரி குப்பை அள்ளும் வாகனத்தை கொடியசைத்து, தொடங்கி வைத்தார்.

35 கிராம ஊராட்சிகளுக்கு பேட்டரி குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement