பால்குட ஊர்வலம்

சங்கராபுரம்: சங்கராபுரத்தில் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் பால் குட ஊர்வலத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சங்கராபுரம், வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் ஜெனன உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி, உலக நலன் வேண்டி பால்குட ஊர்வலம் கோவிலில் இருந்து தொடங்கி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து மீண்டும் கோவிலை அடைந்தது. பின் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் மகா தீபாராதனை நடந்தது.

Advertisement