ராணுவ நடவடிக்கை; ரகசியம் காத்தார் மோடி: டில்லி உஷ்ஷ்...

3


புதுடில்லி: காஷ்மீரில் சுற்றுலா பயணியரின் படுகொலைகளுக்கு பின், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளை அழிக்க முடிவெடுத்தார் மோடி. இதற்கு, 'ஆப்பரேஷன் சிந்துார்' எனவும் பெயரிட்டார். ஆனால், இந்த ஆப்பரேஷன் மிகவும் ரகசியமாக இருந்ததாம்; சக அமைச்சர்களுக்கு கூட இதுகுறித்து பிரதமர் சொல்லவே இல்லையாம்.


யார் யாருக்கு இந்த விஷயம் தெரியும் என்றால், பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் குழுவில் பிரதமர், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித் ஷா, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் உள்ளனர்.

இவர்களில் அமித் ஷா, ஜெய்சங்கர் மற்றும் நிர்மலா சீதாராமனுக்கு மட்டும் இந்த ஆப்பரேஷன் குறித்து தெரியும்; ஆனால், அதுவும் என்ன செய்ய போகின்றனர் என்பது குறித்து இந்த அமைச்சர்களுக்கு முழுமையாக தெரியாதாம்.



அதேநேரம், ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கும், முப்படை தளபதிகளுக்கு மட்டுமே முழு விபரங்கள் தெரியுமாம்; அவ்வளவு ரகசியமாக வைக்கப்பட்டிருந்ததாம், ஆப்பரேஷன் சிந்துார்.

Advertisement