கலைக்கல்லுாரி பட்டமளிப்பு விழா

ஆண்டிபட்டி,: ஆண்டிபட்டி அரசு கலை அறிவியல் கல்லுாரியில் மாணவர்கள் பட்டமளிப்பு விழா நடந்தது. 2002ல் மதுரை காமராஜர் பல்கலை உறுப்புக் கல்லுாரியாக துவக்கப்பட்ட இக்கல்லுாரி, 2019 முதல் அரசு கலை அறிவியல் கல்லுாரியாக செயல்படுகிறது. தற்போது கணிதம், இயற்பியல், வணிகவியல், பொருளாதாரம் ஆகிய பாடப் பிரிவுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

கல்லுாரியில் 2021, 2022, 2023, 2024ல் இளங்கலை படித்து முடித்த 700 மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் சுஜாதா வரவேற்றார். மதுரை காமராஜர் பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முத்தையா வழங்கிய பட்டங்களை மாணவர்கள் ஏற்றுக் கொண்டனர்.

நிகழ்ச்சியில் கணிதவியல்துறைத் தலைவர் மணிகண்டன், இயற்பியல் துறைத் தலைவர் மணிமாறன், வணிகவியல் துறைத் தலைவர் சதுரகிரி, பொருளாதாரத் துறையின் தலைவர் ஜெயகுமார் உட்பட கல்லுாரி பேராசிரியர்கள், அலுவலர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

Advertisement