சென்னையில் பங்களா வீட்டில் தீ; வயதான தம்பதி பலி

6

சென்னை: சென்னையில் பங்களா வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் வயதான தம்பதி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


சென்னை, வளசரவாக்கம் சாவித்திரி நகரில் உள்ள ஆடிட்டர் பங்களா வீட்டில், இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு படையினர்

நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.


இந்த விபத்தில் வயதான தம்பதி தீயில் கருகி உயிரிழந்தனர். நடராஜன், 70, மற்றும் அவரது மனைவி தங்கம் தீ விபத்தில் உயிரிழந்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.


அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. தீ விபத்திற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் சந்தேகப்படுகின்றனர்.

Advertisement