பஹல்காம் தாக்குதல் முதல் ' ஆப்பரேஷன் சிந்துார்' வரை

1

2025 ஏப். 22: 'மினி சுவிட்சர்லாந்து' என அழைக்கப்படும் காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலா பயணியர் மீது பாக்., பயங்கரவாதிகள் தாக்குதல். 26 பேர் பலி. இது பாகிஸ்தானுக்கு பதிலடி தர வேண்டும் என மக்களிடம் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.


ஏப். 23: சவுதியில் இருந்த பிரதமர் மோடி, பயணத்தை பாதியில் முடித்துக்கொண்டு நாடு திரும்பினார். விமான நிலையத்திலேயே தேசிய பாதுகாப்பு செயலர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.


ஏப். 23: இரு நாடுகள் இடையிலான 1960ல் நிறைவேற்றப்பட்ட சிந்து நதிநீர் பங்கீடு ஒப்பந்தம் நிறுத்தம், பஞ்சாப் அட்டாரி - வாஹா எல்லை மூடல், பாகிஸ்தானியர்களுக்கான விசா ரத்து, இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தானியர்கள் ஏப்., 27க்குள் வெளியேற வேண்டும், துாதரக உறவு முறிவு உள்ளிட்ட நடவடிக்கை எடுப்பதாக இந்தியா அறிவிப்பு.


ஏப். 24 : காஷ்மீரில் பயங்கரவாதிகள், அவர்களுடன் தொடர்பு இருந்தவர்களின் வீடுகளை தகர்த்தது இந்திய ராணுவம்.


ஏப். 25: டில்லியில் அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. பீஹாரில் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில், 'பயங்கரவாதிகளுக்கு கனவிலும் நினைக்காத அளவுக்கு பதிலடி தரப்படும்' என பிரதமர் மோடி சூளுரைத்தார்.


ஏப். 29: பயங்கரவாத தாக்குதலுக்கு எதிரான பதிலடியில் முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளித்தார் பிரதமர் மோடி.


மே 3: பாகிஸ்தானில் இருந்து அனைத்துவித இறக்குமதிக்கும் மத்திய அரசு தடை.


மே 4: செனாப் நதியின் மீதான பாக்லிஹர் அணையில் இருந்து நீர் திறப்பை நிறுத்தியது இந்தியா.


மே 6: நாடு முழுதும், 244 இடங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடத்த வேண்டும் என மத்திய அரசு உத்தரவு.


மே 7: அதிகாலை 1:05 - 1:25 மணிக்குள் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர், பாகிஸ்தானில் இயங்கிய ஒன்பது பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் துல்லிய தாக்குதல் நடத்தி அழித்தது.

Advertisement