இந்தியா - பாக்., 3 எல்லை சோதனைச்சாவடிகளில் கொடியிறக்க நிகழ்வுகள் நிறுத்தம்: பி.எஸ்.எப் அறிவிப்பு

புதுடில்லி: பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, பஞ்சாபில் பாகிஸ்தான் எல்லையில் மூன்று இடங்களில் கொடியிறக்க நிகழ்வுகள் நிறுத்தப்படுவதாக எல்லைப் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹால்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு, இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி அளித்து வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான் இடையிலான ஒரே அனுமதிக்கப்பட்ட சாலை வழி வர்த்தக பாதை வாகா - அட்டாரி எல்லை ஆகும்.
சுற்றுலா ரீதியாகவும் இந்த எல்லை மிக முக்கியமானது. தினமும் மாலையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தால் நடத்தப்படும் கொடியிறக்கம் நிகழ்வை பார்க்க பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிவார்கள்.
இரு நாடுகளுக்கு இடையே பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கொடி இறக்கும் நிகழ்வு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரோஸ்பூருக்கு அருகிலுள்ள காண்டா சிங் வாலா- ஹுசைனிவாலா எல்லை மற்றும் ராஜஸ்தானில் உள்ள முனாபாவ்-கோக்ராபர் எல்லை ஆகிய எல்லை சோதனைச் சாவடிகளிலும் இனி கொடி இறக்கும் நிகழ்வு நடக்காது. இதை எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.


மேலும்
-
டில்லியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் கைது
-
பாக்., தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம்!
-
வயது தடை இல்லை; அடுத்து நான் டிகிரி படிப்பேன்; 70 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ராணி பேட்டி!
-
பாகிஸ்தான் 5 துண்டுகளாக சிதறும்: ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கணிப்பு
-
கஜகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்
-
கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ஏழை பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ்