பதற்றமான சூழலில் எல்லை தாண்டிய சீனர்கள் 4 பேர் கைது

பாட்னா: இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், எல்லை தாண்டியதாக சீனாவைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதலை இந்தியா நிகழ்த்தியுள்ளது. இதனால், இரு நாடுகளிடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது.
இந்த நிலையில், எல்லை தாண்டியதாக சீனாவைச் சேர்ந்த 4 பேரை பீகார் போலீசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து ரக்சௌல் டி.எஸ்.பி., தீரேந்திர குமார் கூறுகையில், " தரையா காவல்நிலைய எல்லைக்குட்பட்ட மைத்ரி பாலத்தின் அருகே சீன நாட்டைச் சேர்ந்த 4 பேர் எல்லை தாண்டி வந்துள்ளனர். அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினோம். அவர் சீனாவின் ஹூனான் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது டேன் விஜோன், லின் யுங்காய், ஹே யுன் ஹேன்சென், குவாங் லிங் ஆகியோர் என தெரிய வந்துள்ளது. அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. நாளை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார்கள்," எனக் கூறினார்.


மேலும்
-
“ஆபரேஷன் சிந்தூர்” நடவடிக்கை எதிரொலி: படும் பாதாளத்தில் பாகிஸ்தான் பங்குச்சந்தை!
-
ராணுவ வீரர்களால் பெருமை: ராஜ்நாத் சிங்
-
பாகிஸ்தானின் தாக்குதல் முயற்சியை முறியடித்தது இந்திய ராணுவம்; லாகூரில் வான் பாதுகாப்பு கவச வாகனம் அழிப்பு!
-
அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்: அமைச்சகங்களுக்கு பிரதமர் அறிவுரை
-
ஆபரேஷன் சிந்தூர் பெயரை சொந்தமாக்க 'போட்டா போட்டி'!
-
பாக்., தாக்கினால் பதிலடி நிச்சயம்: ஜெய்சங்கர் உறுதி