இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சி; பாக்., நபர் பஞ்சாபில் சுட்டுக்கொலை

சண்டிகர்: பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தானியர் பஞ்சாபில் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் காரணமாக, பாகிஸ்தான்- இந்தியா இடையே பதற்றங்கள் அதிகரித்து உள்ளது. பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தி இந்தியா தக்க பாடம் புகட்டி உள்ளது.
இந்நிலையில், இந்திய ராணுவம் எல்லைப் பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளது. பஞ்சாபின் பெரோஸ்பூரில் உள்ள எல்லைப் பகுதி வழியாக இந்தியப் பகுதிக்குள் ஊடுருவ முயன்ற ஒரு பாகிஸ்தானியரை இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
பாகிஸ்தானை சேர்ந்த அந்த நபர் இரவு நேரத்தில், சர்வதேச எல்லையைக் கடந்து ஊடுருவ முயற்சி செய்ததை பாதுகாப்பு படையினர் கண்டறிந்தனர். இதையடுத்து, அவர் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அந்த நபர் சுட்டு வீழ்த்தப்பட்டார் என பாதுகாப்பு படை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.








மேலும்
-
டில்லியில் துப்பாக்கிச்சூடு: 3 பேர் கைது
-
பாக்., தாக்குதலை முறியடித்த எஸ் 400 பாதுகாப்பு கவசம்!
-
வயது தடை இல்லை; அடுத்து நான் டிகிரி படிப்பேன்; 70 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ராணி பேட்டி!
-
பாகிஸ்தான் 5 துண்டுகளாக சிதறும்: ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கணிப்பு
-
கஜகிஸ்தான், உஸ்பெக்கிஸ்தான் நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்
-
கரையான் அரித்த ரூ.1 லட்சம்: ஏழை பெண்ணுக்கு உதவிய ராகவா லாரன்ஸ்