பாகிஸ்தான் 5 துண்டுகளாக சிதறும்: ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர் கணிப்பு

இந்துார்: பாகிஸ்தான் ஐந்து துண்டுகளாகப் பிரிந்து சிதறிவிடும் என்று ஆர்.எஸ்.எஸ்., மூத்த தலைவர்களில் ஒருவரான இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம், பாகிஸ்தான் மற்றும் அதன் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் 9 பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.

இந்த நிலையில், ஆர்.எஸ்.எஸ். தலைவர் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார்
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் நடந்த மாநாட்டில் பேசியதாவது:

பிறந்ததிலிருந்து வன்முறையையும் ரத்தக்களரியையும் கண்டு வரும் பாகிஸ்தான், ஐந்து துண்டுகளாகப் பிரிந்து சிதறும் என்று மக்கள் நினைக்கிறார்கள். பாகிஸ்தானுக்கு என்ன நடக்கும் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் இந்த நாடு ஐந்து துண்டுகளாகப் பிரிந்து சிதறும் என்று மக்கள் கூறுகிறார்கள்.
இவ்வாறு இந்திரேஷ் குமார் பேசினார்.

Advertisement