வயது தடை இல்லை; அடுத்து நான் டிகிரி படிப்பேன்; 70 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற ராணி பேட்டி!

கோவை: "வயது தடை இல்லை. நான் அடுத்த டிகிரி பண்ணுவேன்" என 70 வயதில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற கோவை மாவட்டத்தை சேர்ந்த ராணி தெரிவித்துள்ளார்.
கோவையை சேர்ந்த 70 வயதான ராணி பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி பெற்று சாதிக்க வயது ஒரு தடையே இல்லை என நிரூபித்துள்ளார். இவர், வீட்டில் இருந்த படியே படித்து தேர்ச்சி அடைந்து உள்ளார்.
தமிழில் அதிகபட்சமாக 89 மதிப்பெண்களும், ஆங்கிலத்தில் 50 மதிப்பெண்களும், வரலாறு பாடத்தில் 52 மதிப்பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 346 மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி அடைந்து உள்ளார். தேர்ச்சி பெற்றது குறித்து, அவர் அளித்த பேட்டி:
2000ம் ஆண்டில் எனது கணவர் இறந்து விட்டார். அதன் பிறகு என்ன செய்ய, என்று எனக்கு தெரியவில்லை. நிறைய நேரம் இருந்தது. சரி படிக்கலாமே என்று நினைத்தேன். எங்கு சென்று கேட்டாலும் 12ம் வகுப்பு பாஸ் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். நான் 1972-1973ம் ஆண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பாஸ் செய்திருக்கிறேன்.
இன்று சிஸ்டத்தை அரசாங்கம் மாற்றி விட்டார்கள். 12ம் வகுப்பு பாஸ் செய்தால் தான் டிகிரி படிக்க முடியும் என்று சொன்னார்கள். சரி இவ்வளவுதானே, 11ம் வகுப்பு, 12ம் வகுப்பு தேர்வு எழுதி விடும் என்று எழுதினேன். தற்போது 12ம் வகுப்பு தேர்வில் பாஸ் செய்துள்ளேன். நல்ல மதிப்பெண் வந்துள்ளது. அடுத்தது கண்டிப்பாக டிகிரி பண்ணுவேன்.
புத்தகம் வாங்கி வைத்து நானே தான் படித்தேன். யாரிடமும் எந்த சந்தேகமும் கேட்கவில்லை. 51 வருடங்களுக்குப் பிறகு தேர்வு எழுதி உள்ளேன். வீட்டிலிருந்து எழுதி, எழுதி பார்த்தேன். 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தான் மிகவும் கடினம். மூன்று மணி நேரமாக, வேகமாக எழுதுவதற்காக பயிற்சி செய்தேன். விரல் நுனியில் பதில் இருந்தால் தான் வேகமாக எழுத முடியும். யோசித்து, யோசித்து எழுதுவதற்கெல்லாம் நேரம் கிடையாது.
படிப்பிற்கும், வயதிற்கும் சம்பந்தமில்லை. நல்லபடியாக படிக்கலாம். படிக்க வேண்டும் என்ற விருப்பம் மட்டும் வர வேண்டும். இஷ்டப்பட்டு படிக்க வேண்டும். எந்த ஒரு வேலையை யார் செய்தாலும், இஷ்டப்பட்டு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர் கருத்து (2)
aaruthirumalai - ,
08 மே,2025 - 20:08 Report Abuse

0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
08 மே,2025 - 19:56 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement