கோர்காம்பிடென்ஸ் ரூ.20 கோடியில் ஏ.ஐ., மையம்

சென்னை:அமெரிக்காவின் 'கோர்காம்பிடென்ஸ்' நிறுவனம், சென்னையில், 20 கோடி ரூபாய் முதலீட்டில், 'ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ் இன்னோவேஷன்' மையத்தை அமைத்துள்ளது.
இதுகுறித்து, அந்நிறுவனத்தின் தலைவர் கிளாரா டி சில்வா, தலைமை செயல் அதிகாரி பிரகாஷ் அந்தோணி கூறியதாவது:
தகவல் தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்கி வரும் எங்கள் நிறுவனம், சென்னையில், 2006ல் செயல்பாட்டை துவக்கியது. சென்னை கிரீம்ஸ் சாலையில் மேம்பாட்டு மையம் செயல்படுகிறது. அங்கு, 300 பேர் பணிபுரிகின்றனர். அங்கிருந்து, சர்வதேச அளவில் வாடிக்கையாளர்களுக்கு தகவல் தொழில்நுட்ப சேவைகளை வழங்குகிறோம்.
தற்போது, வாடிக்கையாளர்கள் ஏ.ஐ., தொழில்நுட்பத்தை விரும்புகின்றனர். எனவே, 20 கோடி ரூபாய் முதலீட்டில், சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில், ஏ.ஐ., புத்தாக்க மையம் துவக்கப்பட்டு உள்ளது. இதனால், 175 பேருக்கு உயர்தர வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த மையம், ஏ.ஐ., சார்ந்த புத்தாக்கங்களுக்கு ஊக்கமளிக்கும்.
இவ்வாறு கூறினர்.
மேலும்
-
ரேஷன் அரிசி கடத்தியவர் கைது
-
பிளஸ் 2 தேர்வு எழுதிய 8 கைதிகளும் தேர்ச்சி
-
முதல்வர் கொடுத்த நம்பிக்கை
-
பிளஸ் 2 தேர்வு: இரு கைகள் இழந்த அரசு பள்ளி மாணவன் 471 மதிப்பெண் பெற்று சாதனை
-
கி.கிரி மாவட்டத்தில் 13 அரசு பள்ளிகள் 54 தனியார் பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி
-
தர்மபுரியில் 15 அரசு பள்ளிகள் 100 சதவீதம் தேர்ச்சி