பொதுத்தேர்வு முடிவுகள்; கிரசன்ட் பள்ளி 'சென்டம்'

ஊட்டி; ஊட்டி கிரசன்ட் பள்ளி, பிளஸ்-2 வகுப்பு தேர்வில், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றது.

கடந்த மார்ச் மாதம், 2024--25 ம் கல்வி ஆண்டுக்கான தேர்வுகள் நடந்தது. தேர்வு முடிவு வெளியான நிலையில், ஊட்டி கிரசன்ட் பள்ளியில், ஐ.எஸ்.சி., பிளஸ்-2 தேர்வை, 40 மாணவிகள்,19 மாணவர்கள் எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

அதே போல், ஐ.சி.எஸ்.இ., தேர்வை,47 மாணவர்கள், 26 மாணவிகள் எழுதினர். அனைவரும் தேர்ச்சி பெற்றனர். தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் உமர்பாரூக், தலைமையாசிரியர் ஆல்ட்ரிஜ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் பாராட்டு தெரிவித்தனர்.

Advertisement