முப்படைகளை களமிறக்கியது இந்தியா!

2

புதுடில்லி: அத்து மீறி தாக்குதல் நடத்தி வரும் பாகிஸ்தானுக்கு, தகுந்த பதிலடி அளித்து வரும் இந்தியா, முப்படைகளையும் களமிறக்கி உள்ளது.


ராணுவம், விமானப்படை தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், தற்போது கடற்படையும் தாக்குதலை துவக்கி உள்ளது. பாகிஸ்தானின், கராச்சி துறைமுகம் மீது இந்திய கப்பல் படை தாக்குதல் நடத்தி வருகிறது.



பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத், லாகூர், ராவல்பிண்டி, சியால்கோட் மீது, ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது. தொடர்ந்து பெஷாவர் மீதும், இந்தியா தாக்குதலை தொடங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

எல்லையில் மோதல்



காஷ்மீர் எல்லையில், பாக்., வீரர்களுடன், இந்திய வீரர்கள், கடும் துப்பாக்கி சண்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement