சின்கோனா வனத்தில் யானை: வனத்துறை கண்காணிப்பு தீவிரம்

ஊட்டி; தொட்டபெட்டா அருகே சின்கோனா வனப்பகுதியில் முகாமிட்டுள்ள யானையை,'ட்ரோன்' உதவியுடன் கண்காணிக்கும் பணி நடந்து வருகிறது.

ஊட்டி அருகே , தொட்டபெட்டா காட்சி முனைக்கு கடந்த, 6ம் தேதி யானை ஒன்று நுழைய முயன்றது. அதனை வனப்பகுதிக்கு விரட்டும் பணிக்காக, தொட்ட பெட்டா காட்சி முனைக்கு சுற்றுலா பயணிகள் செல்ல மூன்று நாட்கள் தடைவிதிக்கப்பட்டது. நேற்று அந்த யானை, தொட்டபெட்டா அருகே சின்கோனா வனத்தில் முகாமிட்டு இருந்தது. அதனை 'ட்ரோன்' உதவியுடன் கண்காணித்து, அடர்ந்த வனப்பகுதியில் விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement