பாக்., சீரியல்கள், திரைப்படங்களை நிறுத்த வேண்டும்: ஓ.டி.டி., தளங்களுக்கு இந்தியா எச்சரிக்கை

புதுடில்லி: பாகிஸ்தான் சீரியல்கள் மற்றும் திரைப்படங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என்று ஓ.டி.டி., தளங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பஹல்காம் தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது. பாகிஸ்தான் தொடர்பான பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் இயங்கும் அனைத்து ஓ.டி.டி., தளங்கள், ஊடக ஸ்ட்ரீமிங் சேவைகள் மற்றும் இடைத்தரகர்கள், பாகிஸ்தான் சீரியல்கள், திரைப்படங்கள், பாடல்கள், பாட்காஸ்ட்கள் மற்றும் பிற ஸ்ட்ரீமிங் உள்ளடக்கங்களை உடனடியாக நிறுத்த வேண்டும். தேசிய பாதுகாப்பின் நலனுக்காக, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர் கருத்து (1)
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
08 மே,2025 - 20:21 Report Abuse

0
0
Reply
மேலும்
Advertisement
Advertisement