இஸ்லாமாபாத் மீதும் இந்தியா அதிரடி தாக்குதல்; பீதியில் பாகிஸ்தான்

புதுடில்லி: பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீதும், லாகூர் மீதும் இந்தியா அதிரடி தாக்குதலை நடத்தி வருகிறது.
ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள், சுற்றுலா பயணியரை சுற்றி வளைத்து, ஹிந்துக்களை அடையாளம் கண்டு 26 பேரை குடும்பத்தினர் முன் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக, புதன்கிழமை அதிகாலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில், 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில், 9 பயங்கரவாத தளங்களை இந்தியா தாக்கியது. இதில், 80 பேர் வரை மரணம் அடைந்ததாக தெரிகிறது.
இந்தியாவின் 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கையைத் தொடர்ந்து, இந்தியா மீது பாகிஸ்தான் தொடர் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது. இதற்கு இந்தியாவும் தக்க பதிலடி தந்து வருகிறது.
அந்நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்பினை தகர்த்த இந்தியா, பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத் மீதும், லாகூர் மீதும் தாக்குதலை துவங்கியுள்ளது. இதனால் பாகிஸ்தான் பீதியில் உறைந்து போய் உள்ளது.

மேலும்
-
மாநிலம் முழுவதும் சிறுபாசன கணக்கெடுப்பு துவங்கியது
-
எடையாளம் ஆற்றில் குப்பை குவிப்பு மர்ம நபர்கள் தீ வைப்பதால் சீர்கேடு
-
நிலக்கடலை சந்தை விலையை விட வேளாண் துறை விலை அதிகம் விவசாயிகள் அதிர்ச்சி
-
பஸ்சில் கடத்திய ரூ.1.66 கோடி ஹவாலா பணம் பறிமுதல்
-
டாஸ்மாக் அகற்றப்பட்ட பகுதியில் 24 மணி நேரமும் மது விற்பனை
-
கறையான் அரித்து ரூ.1 லட்சம் இழந்த பெண்ணுக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் நிதி