கவர்னருடன் நயினார் திடீர் சந்திப்பு

2

சென்னை : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று கவர்னர் ரவியை சந்தித்து பேசினார்.

தமிழகத்தில் சட்ட விரோதமாக தங்கியுள்ள பாகிஸ்தான், வங்க தேசத்தை சேர்ந்தவர்களை, உடனே வெளியேற்றுமாறும், தேசத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை கைது செய்யுமாறும், தமிழக அரசை வலியுறுத்தி, பா.ஜ.,வினர், சமீபத்தில் மாநிலம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், கவர்னர் ரவியை, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன், நேற்று மாலை சென்னையில் சந்தித்தார்.

இந்த சந்திப்பின் போது, தமிழகத்தில் தங்கி இருக்கும் பாகிஸ்தானியர்களை வெளியேற்ற வலியுறுத்தியும், தமிழக சட்டம் - ஒழுங்கு மற்றும் அரசியல் சூழல் குறித்து பேசியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

Advertisement