தங்கவயல் செக்போஸ்ட்
என்ன சமத்துவம் இது?
ஆணும் பெண்ணும் சமமானவர் என்பதை ரா.பேட்டை அரசு மருத்துவமனையில் தப்பா புரிஞ்சிக்கிட்டு, ஒரே அறையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இஞ்ஜெக் ஷன் போடுறாங்க. இதை எப்படி சகித்துக் கொள்ள முடியும்?
அரசு மருத்துவமனையில் அறைகளுக்கு பஞ்சமே இல்லை. ஆனால், ஒரே அறையில் இரு பாலருக்கும் ஏன் இஞ்ஜெக் ஷன் செலுத்தணும்?
மருத்துவமனையில் மருத்துவ டிப்ளமோவான பார்மசி, நர்ஸிங் பயிற்சி மாணவர்களால் தான் இயங்குது. மருத்துவ ஊழியர்கள் பத்து பேரில் ஒருத்தர் தான் கண்ணுக்கு தென்படுறாங்க. ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனை, இஞ்ஜெக் ஷன், ட்ரிப்ஸ் செலுத்துவது மருந்து, மாத்திரைகள் வழங்கல் என எல்லாமே இவங்க தான் இருக்காங்க.
மாட்டு ஆஸ்பத்திரி போல ஊழியரே, வைத்தியம் பார்க்கும் டாக்டர் போல, இவர்களை பணியை செய்ய சொல்வார்களோ? உயிர்களை காப்பாற்ற மருத்துவத்துறை மிக அவசியமானது. ஆனால் உயிருடன் விளையாட சிறுபிள்ளைத்தனம் தேவையா? இதன் பேர்ல டாப் ஆபீசர்கள் கவனம் செலுத்தணும். திடீர் இன்ஸ்பெக் ஷன் செய்ய வேணும்னு நோயாளிகளே சொல்றாங்க.
கேளுங்க கிடைக்கலாம்!
ப.பேட்டை உட்பட பூங்கா நகர் செல்லும் ரயில் மார்க்கத்தில் தினப் பத்திரிகைகள், வார, மாதாந்திர, இலக்கிய, ஆன்மிக இதழ்கள் எல்லாம் விற்பனைக்கு கிடைச்சது. ஆனால் அவற்றுக்கு மூடு விழாவை நடத்தி ஐந்து வருஷம் ஆகிவிட்டன. திறக்க நடவடிக்கையே காணோம்.
டீ, காபி விற்பனைக்கு தருகிற முக்கியத்துவத்தை பத்திரிகைகளுக்கு தருவதில்லையே. ஏற்கனவே விற்பனை செய்து வந்தவங்களோட கடைகளை வாடகை தகராறில் தான் மூட வெச்சாங்களாம். மூடப்பட்ட கடைகளை, மறுபடியும் திறக்க ரயில்வேகாரங்க மறு டெண்டர் விடலையே.
பத்திரிகைகளை விற்க விடாமல் தடுக்க அப்படியென்ன பத்திரிகைகள் மீது ரயில்வேக்கு வெறுப்போ, விரோதமோ? பத்திரிகை வாங்க செல்பவர்கள் ஏமாற்றம் அடைகிறார்களே தவிர, அதை ஆபீசர்கள் கவனத்திற்கு கொண்டு போய் சேர்க்கல என்கிறாங்க.
சமூக அக்கறை உள்ளவங்க, மவுன விரதம் இருப்பதால் பயனிருக்காது. பெற்ற தாயே ஆனாலும் குழந்தை அழுதால் தானே பால் கிடைக்குது. பெரிய கட்சிகளோ, சின்ன கட்சிகளோ, இதுவும் பொது பிரச்னை தானே!
30 லட்சம் 'வேஸ்ட்!'
பல லட்சம் ரூபாய் அரசு நிதியில், புதிய பஸ் நிலையத்தில் ஒரு சுத்திகரிப்பு குடிநீர் மையத்தை 15 வருஷத்துக்கு முன்னாடி ஏற்படுத்தினாங்க.
அங்கு நிறுவின இயந்திரங்கள் எல்லாமே காணாமல் போயிருக்கு. மூங்கிலால் உருவாக்கப்பட்ட அந்த ஷெட் பாழடைந்து குப்பை கூளமாக மாறியுள்ளது. அதேபோலவே ரா.பேட்டை முனிசி., பஸ் நிலையத்திலும் குடிநீர் சுத்திகரிப்பு ஆலை பாழாய் கிடக்குது. கோல்டு சிட்டியின் பஸ்நிலையத்தில் தண்ணீர் கட்டுப்பாட்டுக்கு 30 எல் வீணா போனது தான் மிச்சம்.
மேலும்
-
வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்!
-
அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்
-
இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு
-
(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்
-
விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா
-
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி