அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்

3


கடந்த 1999ம் ஆண்டு, டிச.,24ல் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து டில்லி புறப்பட்ட இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம், 'ஹர்கத் உல் முஜாகிதீன்' அமைப்பைச் சேர்ந்த ஐந்து பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. விமானத்தில், 179 பயணியர் மற்றும் 11 பணியாளர்கள் இருந்தனர்.


விமானத்தை கடத்திய பயங்கரவாதிகள், நேபாளத்துக்கு தேனிலவுக்கு சென்ற பயணி ஒருவரை குத்திக் கொன்றனர். கடத்தப்பட்ட விமானம், அமிர்தசரஸ், லாகூர், துபாய் என வட்டமடித்து பின்னர் தலிபான் கட்டுப்பாட்டில் உள்ள ஆப்கானிஸ்தானில் உள்ள காந்தஹாருக்கு சென்றது.


பணயக்கைதிகளாக இருந்த விமான பயணியரை காப்பாற்ற வேண்டும் எனில், அதற்கு ஈடாக, இந்திய சிறையில் இருக்கும் மூன்று பயங்கரவாதிகளை விடுவிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது. அவ்வாறு விடுவிக்கப்பட்ட கைதிகளில் ஒருவன் தான், இந்த மசூத் அசார்.


இந்த சம்பவத்தில் பயங்கரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய மீடியேட்டர்கள் (நடுவர்கள்) மூவரில் ஒருவர் 'ரா' உளவு அமைப்பில் இருந்த ஐ.பி.எஸ்., அதிகாரி அஜித் தோவல். அவர் தான் தற்போது, பயங்கரவாதிகளை அழித்தொழிக்கும் இந்தியாவின் ஆபரேஷன் சிந்துார் தாக்குதலிலும், முக்கிய பங்கு வகிக்கிறார்.

Advertisement