விபத்தில் பலியான பிளஸ் 2 மாணவன் 483 மதிப்பெண் பெற்றார்

பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே அரியகுடி கிராமத்தைச் சேர்ந்த மாணவன் விபத்தில் பலியான நிலையில் பிளஸ் 2 தேர்வில் 483 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

அரியகுடி தனியார் பஸ் டிரைவர் கண்ணன் மகன் முகேஷ் 18. இவர் பிளஸ் 2 தேர்வு எழுதிய நிலையில் ஏப்.,8 சத்திரக்குடியில் இருந்து பரமக்குடிக்கு டூவீலரில் வந்த போது டிப்பர் லாரி மோதி பலியானார்.

நேற்று பிளஸ் 2 ரிசல்ட் வெளியானது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் படித்த மாணவன் தேர்வில் 483 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்.

Advertisement