ஆவின் பால் வாகனம் கவிழ்ந்து பள்ளிக்கரணையில் விபத்து
பள்ளிக்கரணை, பள்ளிகரணை, ரேடியல் சாலையில் வடிகால்வாய் அமைக்கும் பணி நடந்து வருகிறது. சாலையின் நடுவே பணி நடப்பதால், இருபுறமும் வாகனங்கள் செல்ல, சிறிய அளவிலான சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நேற்று மாலை சோழிங்கநல்லுார், ஆவின் பால் பண்ணையில் இருந்து, 290 பெட்டியில் பால் பாக்கெட் ஏற்றிக் கொண்டு, சரக்கு வாகனம் வந்தது.
ஓட்டுநர் கோதண்டன், 40, கண் அயர்ந்ததால், வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பள்ளத்தில் சிக்கி, கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதில், யாருக்கும் காயம் ஏற்படவில்லை. 290 பெட்டியில் கொண்டு சென்ற பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பல பால் பாக்கெட்டுகள் உடைந்து, பால் வீணாகியது. தகவல் அறிந்த பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார், வாகனத்தை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்
-
இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு
-
(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்
-
விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா
-
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி
-
தகராறு: 3 பேர் மீது வழக்கு
Advertisement
Advertisement