சூறாவளி காற்றால் சாய்ந்த ஆலமரம்
அம்மாபேட்டை, அம்மாபேட்டை அருகே ஊமாரெட்டியூர், சென்ரெட்டி நகர் பகுதியில், கருப்புசாமி மற்றும் கன்னிமார் கோவில் உள்ளது. இப்பகுதியில் வேப்பமரம், ஆலமரம் அருகருகே இருந்தது. ஊமாரெட்டியூர், நெரிஞ்சிப்பேட்டை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், பலத்த சூறாவளி காற்று நேற்று மாலை வீசியது.
இதில் கருப்புசாமி கோவில் பகுதியில் இருந்த, 60 ஆண்டு பழமையான ஆலமரம் வேரோடு சாய்ந்தது. அருகில் இருந்த முனுசாமி என்பவரின் வீட்டின் மீது கிளைகள் பட்டு கூரை சேதமானது. அப்போது வீட்டில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் ஏற்படவில்லை. காற்றால் மின் தடை ஏற்பட்டது.
* பங்களாபுதுார்-கோபி செல்லும் வழியில் உள்ள ஒண்டி முனியப்பன் கோவில் பகுதியில் ஏராளமான மரங்கள் உள்ளன. நேற்று மாலை இப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது ஒண்டி முனியப்பன் கோவில் அருகே அரக்கன்கோட்டை வாய்க்கால் கரையோரம் இருந்த மரம் முறிந்து சாலையோரம் விழுந்தது.
உள்ளூர் வர்த்தக செய்திகள்
* ஈரோடு மாவட்டம் கோபி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாழைத்தார் ஏலம் நேற்று முன்தினம் நடந்தது. கதளி ஒரு கிலோ, 50 ரூபாய், நேந்திரன், 36 ரூபாய்க்கும் விற்பனையானது. பூவன் தார், 530, தேன்வாழை, 570, செவ்வாழை, 900, ரஸ்த்தாளி, 700, பச்சைநாடான், 530, மொந்தன், 310, ரொபஸ்டா, 400 ரூபாய்க்கும் விற்பனையானது. விவசாயிகள் கொண்டு வந்த, 6,170 வாழைத்தார்களும், 10.55 லட்சம் ரூபாய்க்கு
விற்றன.
* மொடக்குறிச்சி உப ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்துக்கு, 9,953 தேங்காய்கள் விற்பனைக்கு வந்தது. ஒரு கிலோ தேங்காய், 39.69 முதல், 56.69 ரூபாய் வரை, 3,907 கிலோ தேங்காய், 1.87 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோல் கொப்பரை தேங்காய், 100 மூட்டை வரத்தாகி முதல் தரம் கிலோ, 170.69 முதல், 176.69 ரூபாய்; இரண்டாம் தரம் கிலோ, 96.76 முதல், 150 ரூபாய் வரை, 2,144 கிலோ கொப்பரை, 3.44 லட்சம் ரூபாய்க்கு விலை
போனது.
மா