தந்தை கொலை மகன் கைது

கருமத்தம்பட்டி; கருமத்தம்பட்டி, கரவழி மாதப்பூரை சேர்ந்தவர் அப்புக்குட்டி, 65.இவரது மனைவி அருக்காணி. மகன் சுரேஷ், 32. கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் கருமத்தம்பட்டி போலீசில், தனது கணவர் உடல்நிலை சரியில்லாமல் இறந்து விட்டதாக புகார் தெரிவித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த நான்கு நாட்களுக்கு முன், குடிபோதையில் அப்புக்குட்டிக்கும், மகன் சுரேஷுக்கும் தகராறு நடந்துள்ளது. அப்போது, ஆத்திரமடைந்த சுரேஷ், தந்தையை சரமாரியாக தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த அப்புக்குட்டி நேற்று முன்தினம் உயிரிழந்தது தெரிந்தது. இதையடுத்து, சுரேஷை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement