சாலையில் இடையூறாக கான்கிரீட் கட்டுமானங்கள் அப்புறப்படுத்த வாகன ஓட்டிகள் கோரிக்கை

மீஞ்சூர்:சோழவரம் அடுத்த, ஒரக்காடு - அருமந்தை சாலை, மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையின் இணைப்பு சாலை ஆகியவை சந்திக்கும் பகுதியில் மாறம்பேடு கிராமம் உள்ளது.
இந்த இணைப்பு சாலையில் கான்கிரீட் கட்டுமானங்கள் போக்குவரத்திற்கு இடையூறாக இருக்கிறது.
இதனால், மீஞ்சூர் - வண்டலுார் வெளிவட்ட சாலையின் இணைப்பு சாலையில் இருந்து இடதுபுறமாக அருமந்தை திரும்பும் வாகனங்களும், ஒரக்காடில் இருந்து அருமந்தைக்கு நேராக செல்லும் வாகனங்களும் சிரமத்திற்கு உள்ளாகின்றன.
வாகனங்கள், இடையூறாக உள்ள கான்கிரீட் கட்டுமானங்கள் மீது மோதாமல் இருக்க, வலது, இடது என, மாறி மாறி பயணிக்கின்றன. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தடுமாற்றம் அடைகின்றன.
இரவு நேரங்களில் சாலையில் கான்கிரீட் கட்டுமானங்கள் இருப்பது தெரியாத நிலையில், விபத்து அபாயம் ஏற்படும் சூழல் உள்ளது.
மேற்கண்ட பகுதியில் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வரும் கான்கிரீட் கட்டுமானங்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மேலும்
-
வம்பு சண்டைக்கு போகமாட்டோம் வந்த சண்டையை விடமாட்டோம்!
-
அஜித் தோவல்..! அன்று மீடியேட்டர்; இன்று டெர்மினேட்டர்
-
இந்தியா - பாக்., விவகாரத்தில் தலையிடமாட்டோம்: அமெரிக்கா அறிவிப்பு
-
(மஹா)பாரதத்தை காக்கும் சுதர்சன சக்கரம்; எதிரி ஏவுகணைகள் நிர்மூலம்
-
விபரீத சாகசம் காட்டினால் விடமாட்டோம்! சொன்னதை செய்து காட்டும் இந்தியா
-
பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி