அரூர் பகுதியில் சூறைக்காற்றுடன் மழை

அரூர், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் நேற்று மாலை, 5:30 முதல், இரவு, 7:00 மணி வரை, சூறைக்காற்று மற்றும் இடி, மின்னலுடன் பரவலாக விட்டு விட்டு மழை பெய்தது.

சூறைக்காற்றால், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் விளம்பர பலகைகள் துாக்கி வீசப்பட்டன. எல்லப்புடையாம்பட்டியில், மயானம் அருகில் இருந்த மின்கம்பம் மீது மரம் விழுந்ததில் மின்கம்பிகள் அறுந்து சாலையில் விழுந்தது. பல இடங்களில் மின்தடை ஏற்பட்டது. மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதுடன், குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.

Advertisement